153வதா? 154வதா? குழப்பத்தில் இருக்கும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 153வது பிறந்த காந்தி ஜெயந்தி! தமிழகத்தில் மட்டும் 154வது காந்தி ஜெயந்தி! 

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று புது டெல்லி அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனைகள் சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு ஆளுநர் என்.ஆர். ரவி, முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் 153 வது ஆண்டிற்கு பதிலாக 154 ஆம் ஆண்டு என அச்சிடப்பட்டுள்ளது. இதனால் விழாவில் கலந்து கொண்டு கொண்ட அனைவரும் பெருங்குழப்பம் அடைந்தனர். இந்நிகழ்வு தவறுதலாக நடக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலும் 153வது ஜெயந்தி விழாவிற்கு பதிலாக 154வது காந்தி ஜெயந்தி என குறிப்பிட்டு இரு பதிவுகள் போடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு மட்டும் 154 ஆவது காந்தி ஜெயந்தி விழா தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொண்டாடப்படுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

153rd or 154th Tamil Nadu government in confusion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->