கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!!
15 days court custody to three peoples for fake news published abaout karoor incident
கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் பதினைந்து நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் தேதி கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் , தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி 3 பேரும் போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
15 days court custody to three peoples for fake news published abaout karoor incident