144 தடை உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்கு மற்றும் வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 646 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 611 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 9 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 65.66 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போது 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 98 ஆயிரத்து  995 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 5 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 லட்சத்து 22 ஆயிரத்து 867 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 7 கோடியே 85 லட்சத்து 51 ஆயிரத்து 084 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 case in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->