மொபைலில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்... மகள் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இலந்தகுளம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணம்மாள் . இவருக்கு முத்துலட்சுமி (17) என்ற மகள் இருக்கிறார். முத்துலட்சுமி  அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் அவருக்கு தாயார் செல்போன் வாங்கி தந்துள்ளார். இந்நிலையில், முத்துலட்சுமி  கடந்த சில நாட்களாக படிக்காமல் செல்போனில் கேம் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த முத்துலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th Student Commited Suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->