மாரத்தான் போட்டியை கண்காணிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றம் அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை கண்காணிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் செல்லும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

செங்குன்றத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் சுரேந்தர், பாலாஜி இருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி உள்ளது.

இதனால் பலத்த காயமடைந்த சுரேந்தர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அதிவேகமாக சென்ற காரணத்தினாலும், தலைகவசம் அணியாமல் இருந்தாலும் இந்த நிலை ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th std student death in accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->