ஜூலை 15ம் தேதி முதல்..கல்லூரி மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்..அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 தேதி அன்று அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது.

கடந்த மே 7-ஆம் தேதி முதல் திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகின்றது. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி படிக்கின்ற மாணவிகளுக்குப் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் வருகின்ற கல்வி ஆண்டிலேயே இது செயல்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்வி வளர்ச்சி நாளாக காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜூலை 15-இல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மூன்று லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 scholarships for college students from July 15


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->