சொமாட்டோ நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் கொசுக்களால் பரவிவரும் டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால், அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் பயன்படுத்தப்படாத டெலிவரி பைகள் மாடியில் வைக்கப்பட்டுள்ளது.

அதை ஆய்வு செய்து பார்த்த போது அதில் டெங்குவை பரப்பும் வகையிலான கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 rs fine to zomato industry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->