சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு ரூ.1000 முதலமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,865 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 19 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையிலும் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->