மக்களை சோம்பேறி ஆக்கும்100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம்! அங்கு நடப்பது என்ன?? - Seithipunal
Seithipunal



இன்றைக்கு நாடுமுழுவதும் ஏழைமக்களுக்கு வேலையும் சம்பளமும் தரக்கூடிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் எனப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் தமிழக மக்கள் சோம்பேறி ஆகிவிட்டனர்.

பல கிராமப்புறத்தில் உள்ள படித்த ஆண்களும் பெண்களும் 100 நாள் வேலைக்கான  அட்டையை வாங்கி வைத்துகொண்டு குளங்களிலும் வாய்க்காள்களிலும் அமர்து அரட்டை அடித்து பொழுதை கழிக்கின்றனர் .

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தினால் வேலைகள் ஏதும் அதிகப்படியாக நடப்பதில்லை. ஆனால் அரசின் பணம் வீணாகிறது. மேலும் இந்த 100 நாள் வேலையில் அதிகப்படியான முறைகேடுகள் நடக்கின்றன. 100 நாள் வேலைக்கு செல்லாதவர்கள் கூட வேலைக்கு சென்றதுபோல் கணக்கு காட்டி பணத்தை பெறுகின்றனர்.

100 நாள் வேலை என்பதை கொண்டு வந்து உழைக்கும் மக்களை சோம்பேரிகளாக ஆக்கிவிட்டனர். 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு சென்று வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி பழகியவர்கள் விவசாய வேலை பார்ப்பதற்கு உடம்பு வணங்குவதில்லை. 

100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் விவசாயம் நலிவடைந்து விட்டது. இதே திட்டத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் அரசு கட்டிடங்கள் கட்டுதல், அரசு பள்ளிகளை சீரமைத்தல், சாலையோர மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பயனுள்ள வேலையில் அமர்த்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 days job making people lazy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->