டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு, தென்காசியில் மறைந்திருந்த 10 பேர் சிக்கினார்கள்! விமான நிலையத்தில் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்துவது  மற்றும் சிகிச்சை அளித்து வருவதில் அனைத்து மாநில அரசுகளும் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தானாக முன்வந்து கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதித்துக் கொள்ளவும், அனைத்து மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 10 பேர் இன்று மலேசியாவிற்கு தப்பி செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த 10 பேர் டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் வழியாக வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து  தென்காசிக்கு சாலை மார்க்கமாக வந்து, அங்கேயே மறைந்து இருந்து உள்ளார்கள். 

இந்த நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் தங்கியுள்ள மலேசியாவை சேர்ந்தவர்கள்  அந்த நாட்டிற்கு செல்வதற்கு கோரிக்கை வைக்கவே, அந்த நாட்டில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தன. அந்த இரண்டு விமானங்களிலும் அந்த நாட்டை சேர்ந்தவர்களை, சென்னையில் உள்ளவர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளவர்களையும் அனுப்பி வைக்க இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது. ஏனெனில் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையிலிருந்து இன்று காலை புறப்பட இருந்த விமானத்தில் 127 பயணிகள் புறப்பட இருந்தனர். இவர்களின் பாஸ்போர்ட்டை சோதித்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது. அதில் 10 மலேசியர்கள் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ள சுற்றுலா விசாவில் மலேசியாவிலிருந்து இந்தியா வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர்கள் 10 பேரும் இந்திய அரசு நடத்தும் சோதனைகளில் இருந்து தப்பித்து மலேசியா செல்வதற்கு திட்டமிட்டு, திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். அங்கிருந்து சாலை வழியாக தமிழகத்தில் உள்ள தென்காசிக்கு வந்து தங்கி இருந்துள்ளனர். அங்கு தங்கியிருந்தவர்கள் மலேசிய நாட்டு தூதரகத்திற்கு தாங்கள் தென்காசியில் இருந்து வருவதாக தவறான தகவல்களை அளித்து விமானத்தில் பயணிக்க முயற்சித்துள்ளனர். 

ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். அவர்களுக்கு இதுவரை எந்தவித மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் எதுவுமே செய்யாமல் அவர்கள் நாட்டுக்கு செல்ல முயன்றுள்ளனர்.  அவர்கள் தவிர்த்த மீதமுள்ள 117 பயணிகளுடன்  மலேசிய விமானம் மலேசியாவிற்கு பறந்து சென்றது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்டதை மறைத்ததற்காக அவர்கள் மீது வழக்கு தொடர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதே போல் அவர்களை பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் வழியாக திருவனந்தபுரம் வந்தவர்கள் அங்கிருந்து எங்கு தங்கினார்கள் எவ்வாறு தென்காசிக்கு வந்தார்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை தற்போது வைத்து உள்ளார்கள். அவர்கள் யார் யாரெல்லாம் சந்தித்துள்ளார்கள் என்ற தகவல்களை தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 Malaysian Islamic people identified in Chennai airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->