எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு உட்சபட்ச நிவாரணம் தொகையை அறிவித்தார் முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் தமிழக காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பணியிலிருந்தார் அப்போது அங்குள்ள மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் 4 ரவுண்டுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 2 தோட்டாக்கள் உதவி ஆய்வாளர் வில்சனின் உடலில் பாய்ந்துள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வில்சனின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த மசூதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், வில்சனை சுட்டுக் கொன்றுவிட்டு 2 பேர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கேரளாவில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வாளரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 2 பேருடன் தொடர்புடைய சையது முகமது, அப்பாஸ் ஆகிய இருவரை பாலக்காட்டில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் இருநபர்களின் புகைப்படம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தன.

இந்தநிலையில், கன்னியாகுமரி - வாகன சோதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் மற்றும் நிவாரணம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிதிருந்தார். அந்தவகையில், சிறப்பு ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 crore for si wilson family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->