அந்த மாவட்டத்திற்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் பேருந்துகளை போன்ற லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கிராமத்திற்கும் போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்கி வருகின்றது.

இனிமேல், சென்னையில் இயக்குவதை போன்று கோவையிலும் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு இணங்க விரைவில் இந்த சேவை தொடங்கப்பட இருக்கிறது. மேலும், ஜெர்மன் வங்கியின் நிதி உதவி மூலம் 2000 மின்சார பேருந்துகளும் ps6 வகையான 12,000 பேருந்துகளும் வாங்க அனுமதி வழங்கி இருக்கின்றது. 

மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சை கோவை ஆகிய பல்வேறு நகரங்களில் இயங்க அனுமதிக்க கேட்கப்பட இருக்கின்றது. சென்னை மாநகருக்கு மட்டும் 3000 மின்சார பேருந்துகளை வாங்க விரைவில் அனுமதி வழங்கப்படுகின்றது. தற்போதைய நிதி நெருக்கடியிலும் தீபாவளி பொங்கல் பண்டிகையின்போது போக்குவரத்துக்கழக ஊழியர்களின் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வருடத்திற்கு 5,500 கிலோ மீட்டரை இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் குடும்பத்துடன் குற்றால,ம் கொடைக்கானல் போன்ற இடங்களில் குடும்பத்துடன் சென்று தங்க போக்குவரத்து கழகம் சார்பில் தங்கும் விடுதியும் ஏற்படுத்தப்படுகின்றது." என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

அந்த மாவட்டத்திற்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்.! 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->