பஞ்சாப் அணி விடுவித்த யுவராஜின் அடிப்படை விலை இவ்வளவுதான்! மற்ற வீரர்கள்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்த தொடருக்கு வீரர்களை அந்தந்த அணிகள் ஏலத்தின் மூலம் எடுத்து வருவதால் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கோடிகளில் ஏலம் போவார்கள்.

இந்நிலையில், வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 12 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் வரும் 18 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாட்டு வீரர்களும் சேர்த்து மொத்தம் 70 வீரர்கள் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். 

ஆனால் இந்த தொடரில் பங்குபெற 14 நாடுகளை சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஹாங்காங், நெதர்லாந்து, அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்தும் போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து மட்டும் அதிகபட்சமாக 59 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ஐபிஎல் பங்கேற்கும் அணிகளின் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டாலும், நிறைய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த முறை பஞ்சாப் அணிக்காக விடிய யுவராஜ், அந்த அணியில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். அதேபோல் விர்த்திமான் சகா, அக்‌ஷர் படேல், முகமது ‌ஷமி, இஷாந்த்சர்மா ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.1 கோடியாகும்.

இந்தியா வீர்களிலே உனட்கட் மட்டும் ரூ.1½ கோடியாக அடிப்படை விலையாக உள்ளது. இவர் கடந்த முறை ராஜஸ்தான் அணி மிக அதிகமாக 11½ கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில் தற்போது அந்த அணி அவரை விடுவித்துள்ளது.

எந்த ஓரு இந்தியா வீரரும் ரூ.2 கோடிக்கு மேல் போகாத நிலையில், வெளிநாட்டு வீரர்களான ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்ச்ன, மேக்குல்லம் உள்பட 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக உள்ளது.

English Summary

Yuvraj's base price for the Punjab team Other players!


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal