உலக கோப்பையின் முதல் பரிசிற்கான தொகையை அறிவித்த ஐசிசி!! இவ்வளவு தொகையா?!  - Seithipunal
Seithipunal


வருகிற மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போதைய சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா,  நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

இந்த போட்டி மொத்தமாக 46 நாட்கள் நடைபெறும். லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த லீக் ஆட்டத்தின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் கிரிக்கெட் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறி செல்லும். 

நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடி என்றும், இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் கிரிக்கெட் அணிக்கு ரூ.28 கோடி என்றும், இறுதி போட்டியில் பங்கேற்று தோற்கும் அணிக்கு ரூ.14 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த முறையை விட இந்த முறை பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்றமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு (2015 ல்), ரூ.26 கோடியும், 2-வது இடம் பெறுகிற அணிக்கு ரூ.12 கோடியும் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

லீக் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு 28 லட்சமம், லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சமும் வழங்கப்படும். இதுபோல அரையிறுதியில் தோல்வி பெறும் அணிக்கு ரூ.5 கோடியே 61 லட்சமாக உயர்த்தப்பட்டது. முன்னதாக இதற்கு ரூ.4 கோடியே 20 லட்சம் தான் பரிசாக வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup price announced by icc


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->