உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம்?! தேர்வு குழு திடீர் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் கேப்டனாக விராட் கோலி, துணை கேப்டனாக ரோகித் சர்மாவும்  ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஆக லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக ஜஸ்பிரிட் பும்ராஹ், புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகிய மூவரும், ஆல்ரவுண்டர்கள் ஆக ஹர்திக் பாண்டியா விஜய்சங்கர், ரவிந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர். 

இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்த கேதர் ஜாதவ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். 12  போட்டியில் விளையாடிய கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து ஆட்டத்தில் இடம்பெற்று கொண்டிருந்தார். 12வது போட்டியின்போது பில்டிங் செய்கையில் அவர் காயமடைந்த நிலையில் தொடரில் இருந்து அவர் விலகினார். உலக கோப்பை போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெற்று விடுவார் என்றும், உலக கோப்பையில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 23-ஆம் தேதி உலக கோப்பை அணியை அறிவிக்க இறுதி நாளாகும். 23 ஆம்  தேதிக்குப் பிறகு ஐசிசியின் அனுமதி பெற்றே அணியில் மாற்றத்தினை செய்ய முடியும். அதே போல இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் கலந்து கொள்ள மே 22ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிற்கு பயணமாகிறது. பயணம் மேற்கொள்ள உள்ள 22 ம் தேதி வரை கேதர் ஜாதவ் உடல் தகுதி கவனிக்கப்படும் எனவும், அவர் உடல் தகுதி பெற்று விட்டால் அவர் இங்கிலாந்திற்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஏ பிரிவு போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. அப்பொழுது  கேதர் ஜாதவ் காயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அவர் உடல் தகுதி பெறவில்லை எனில் அதற்கு பதிலாக அம்பத்தி ராயுடு அல்லது அக்சர் பட்டேல் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் மட்டுமில்லாது அந்த இடத்திற்கு மேலும் மூன்று வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நவ்தீப் ஷைனி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதுவாக இருந்தாலும் மே 22ஆம் தேதி இந்திய அணி பயணம் ஆகும் போதுதான் உறுதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக தொடர் சிகிச்சையில் இந்திய அணிக்கான உடற்தகுதி நிபுணருடன் பயிற்சியில் உள்ளார். தினம் தினம் பரிசோதனைகளை செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேதர் ஜாதவ் பேட்ஸ்மேன் மட்டுமல்லாது பகுதிநேர  பந்துவீச்சாளராக, விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்படும் அவர் அணியில் இடம் பெறாமல் போனால் அது நிச்சயமாக இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இடம்பெறப்போகும் அக்சர் படேல் அல்லது அம்பத்தி ராயுடு அவருடைய இடத்திற்கு நிச்சயம் ஈடு கொடுக்க மாட்டார்கள் என்பது ரசிகர்களின் கணிப்பாக உள்ளது. 

அயோக்யா பட விமர்சனம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup Indian team squad may be changed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->