ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரானது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலக்கோப்பை முதல் மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் டி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அணைத்து அணிகளையும் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

அடுத்தபடியாக நடந்த சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி.

இந்நிலையில், இன்று மதியம் 1.30  நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பௌலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அண்டர்-19 அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பார்சவி சோப்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அண்டர்-19 அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மேலும், இதன் மூலம் இந்திய மகளிர் அண்டர் -19 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.

அதன்படி, மகளிர் அண்டர் -19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஜனவரி 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Under 19 T20 World Cup India qualified final


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->