ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரானது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலக்கோப்பை முதல் மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்று மற்றும் சூப்பர் 6 போட்டிகளின் முடிவில் இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதில் இன்று மதியம் 1.30  நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இதனையடுத்து ஜனவரி 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு நடைபெறும் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens junior World Cup final IND vs ENG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->