குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில் இன்று தொடங்குகிறது.

சாதாரண ஒலிம்பிக் போட்டிகளை போலவே, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உறைபனியில் விளையாடக்கூடிய போட்டிகளை மட்டும் கொண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.

இன்று தொடங்கும் இப்போட்டித் தொடரில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 2,871 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெறும் இந்த 24 -வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்பீடு ஸ்கேட்டிங் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் ஈடுபட்ட சீன இராணுவ வீரருக்கு ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து தொடக்க விழா நிகழ்ச்சிகளை இந்தியா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Winter Olympics Starts today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->