ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர அணியின் கேப்டன்!! - Seithipunal
Seithipunal


2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தினை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் கேட்ச் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறுகையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒரு கையில் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2019 ஐபிஎல் தொடரிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லயம்சன் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் ஏற்பட்டு ஆட்டத்தின் பதிலே  வெளியேறினார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும்  அவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

உலககோப்பை தொடரும் அடுத்து நடக்க உள்ளதால், வில்லியம்சனை ஐபிஎல் தொடரில் பங்கேற்க வைக்கவேண்டாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஐபிஎல் தொடரில் வில்லயம்சன் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

English Summary

williamson ruled out for ipl


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal