தற்போதைய கிரிக்கெட்டில் வல்லவன் யார்?! மல்லுக்கட்டும் உலகின் டாப் 4 வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் போட்டிகள் என்றாலே வேலையெல்லாம் விட்டுவிட்டு டிவி முன் அமர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.  கிரிக்கெட் போட்டியானது இப்போது பல வடிவங்களில் நடக்கிறது. எத்தனை விதமான போட்டிகள் நடந்தாலும் அதில் மிகவும் ரசிக்கும்படியாக அமைவது டெஸ்ட்  போட்டிகள் தான்..  ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டியில், எவ்வளவு பெரிய அதிரடி வீரராகவே இருந்தாலும் மிகவும் நிதானமாகவே விளையாடப்படும் இந்த போட்டியில் பல சுவாரஸ்யங்கள் நடக்கும்... 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை, பார்க்கும் அளவிற்கு தற்போதைய ரசிகர்களுக்கு பொறுமை இருக்காது.  ஏனெனில் அப்பொழுது விளையாடும் பேட்ஸ்மேன்கள் மிகவும் நிதானமாக பொறுமையாக விளையாடுவார்கள். பல டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடையும். இதனால் டெஸ்ட் போட்டிகளை கிரிக்கெட்டை ரசித்து பார்ப்பவர்கள் மட்டுமே பார்க்க முடிந்தது 

ஆனால் 20 ஓவர் போட்டிகளில் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் நிலையானது முற்றிலும் மாறிப்போனது. பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளுக்கு தற்பொழுது முடிவுகள் கிடைக்கிறது. அதேபோல வீரர்களை பார்த்தோம் என்றலும் சச்சின், லாரா, பாண்டிங், ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களை மறக்கடிக்கும் அளவில் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் உருவாகிவிட்டார்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் மிக முக்கியமான நான்கு வீரர்களாக இருப்பவர்கள் இந்தியாவின் கேப்டன் விராட்கோலி, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தான். இவர்களே இந்தப் பத்தாண்டு தலைமுறையின் மிகச்சிறந்த வீரர்களாக போற்றப்படுகிறார்கள்.. 

இந்த நான்கு பேரில்டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் யார்? ஒவ்வொரு இன்னிங்சுகளிலும் மிக சிறப்பாக செயல்பட்டவர் யார்? என்ற சுவாரஸ்யமான தகவல்களை நாம் இங்கே பார்க்க போகிறோம்... 

டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதாவது முதலில் பேட்டிங் செய்யும் போது அதிக அவரேஜ் வைத்திருப்பவராக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் முதல் இடத்தில் இருக்கிறார், இரண்டாவது இடத்தில் இந்தியாவின், விராட் கோலியும்,  மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் ரூட்டும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் வில்லியம்சன் என்று இருக்கிறார்கள்.. 

அதேபோல போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்திலும், வில்லியம்சன்  இரண்டாவது இடத்திலும், ஸ்மித் மூன்றாவது இடத்திலும், ரூட் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.. 

அதேபோல மூன்றாவது இன்னிங்ஸில் ஸ்மித் முதல் இடத்திலும், ரூட் இரண்டாவது இடத்திலும், வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், இந்தியா விராட்கோலி 4வது இடத்திலும் இருக்கிறார்கள். 

நான்காவது இன்னிங்க்ஸை பொறுத்தவரை நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் முதலிடத்திலும், இந்தியா விராட் கோலி இரண்டாவது இடத்திலும், ரூட் மூன்றாவது இடத்திலும், ஸ்மித் 4வது இடத்திலும் இருக்கிறார்கள். 

இந்த 4 பேரின் டெஸ்ட் தரவரிசை பட்டியலை பார்த்தாலும் இவர்கள் தான் டாப் என்பது தெரியவரும். தற்போது உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுமித்தும், இரண்டாவது இடத்தில் இந்தியாவின் விராட் கோலியும், மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்தின் கனே வில்லியம்சன், இங்கிலாந்தின் ரூட் 6வது இடத்திலும் இருக்கிறார்கள்.. 

ஆஷஸ் தொடரில் சொதப்பியதால் ரூட் சில இடங்கள் பின் தங்கிவிட்டார். இந்த தலைமுறையில் இந்த நான்கு வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக முதலிடத்தில் ஸ்மித் அதிக சராசரியுடன் இருக்கிறார்..  அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் விராட் கோலியும்.. அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வில்லியம்சன்..  நான்காவது இடத்தில் இங்கிலாந்து ரூட்டும் இருக்கிறார்கள்.. 

ஒருநாள் போட்டிகளில் இந்தியா வின் விராட் கோலி தான் கிங் என்றாலும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் தான் கிங் ஆக இருக்கிறார்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is the top in test in Fab four


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->