உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு போட்டிபோடும் அணிகள் எது?.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பத்து அணிகள் விளையாடி வருகிறது. அதில் அரை இறுதிக்கு தகுதி பெரும் அணிகள் பற்றிய நிலவரம்.

நியூசிலாந்து:-
இந்த அணிக்கு இன்னும்  3 லீக் ஆட்டங்கள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பினை உறுதி ஆக்கிவிடும். இந்த அணி 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா:-
இந்த அணிக்கு இன்னும்  3 லீக் ஆட்டங்கள் உள்ள  நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பினை உறுதி ஆக்கிவிடும். இந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியா:-
இந்திய அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளது அதி 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். 9 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து:-
இந்த அணிக்கு இன்னும்   3 ஆட்டங்கள் உள்ளது அதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம். ஆனால் இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளை பெற்று 4 வது இடத்திற்கு முன்னேறும். ஆகையால் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்களில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது

இலங்கை:-
இந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளது  அதில் அனைத்திலும் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் இங்கிலாந்து அணி விளையாட உள்ள 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைய வேண்டும். ஒரு வேலை இங்கிலாந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் புள்ளிகள் அடிப்படையில் 12 புள்ளிகளுடன் இலங்கை 4 வது  இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பினை பெரும்.  6 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.   

வங்கதேசம்:-
இந்த அணிக்கு இன்னும்  3 ஆட்டங்கள் உள்ளது  வங்கதேசம் அதில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். மேலும் இலங்கை தான் விளையாடவுள்ள 3 போட்டிகளில் தோல்வியும் மேலும் இங்கிலாந்து தான் விளையாடவுள்ள 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைந்தால் 11 புள்ளிகளுடன் வங்கதேச அணி அரையிறுதி சுற்று வாய்ப்பை அடையும். 5 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

மேற்கு இந்திய தீவு அணி:-
இந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளது  மேற்கு இந்திய தீவு அணி அதன் அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும், இங்கிலாந்து விளையாடும் 3 போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும் மற்றும் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி அடைந்தாள். மேற்கு இந்திய தீவு அணி புள்ளி  பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை பெரும். 3 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which teams in the world cup semi final qualified


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->