அரை இறுதியில் இந்தியாவுடன் மோத போகும் அணிகள்.! ஓர் அலசல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா உள்ளிட்ட பத்து அணிகள் விளையாடி வருகிறது. அதில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் எந்தெந்த அணிகளுடன் மோதும் என்பதை பற்றி சில தகவல்கள்.

1. ஆஸ்திரேலியா - 14 புள்ளிகள்

2. இந்தியா - 13 புள்ளிகள்

3. இங்கிலாந்து - 12 புள்ளிகள்

4. நியூசிலாந்து - 11 புள்ளிகள்

5. பாகிஸ்தான் - 9 புள்ளிகள்

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில இருக்கும்  அணியும் நான்காம் இடத்தில் இருக்கும்  அணியும் 9-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் போட்டியில் முதல் அரை இறுதியில் மோதும்.இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியும் மூன்றாம் இடத்தில் இருக்கும்  அணியும் பெர்மிங்காம் மைதானத்தில் 11-ம் தேதி நடக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

ஆஸ்திரேலியா  கடைசி லீக்  போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளோடு முதலிடம் பிடிக்கும். மாறாக இலங்கையிடம் இந்திய அணி  தோற்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா   முதலிடத்திலேயே இருக்கும்.

ஆஸ்திரேலியா மற்றும்  தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டால் ஆஸ்திரேலியா 15 புள்ளிகள் கிடைக்கும். அப்படி நிகழ்ந்தால் இந்தியா இலங்கையை வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு 15 புள்ளிகள் கிடைக்கும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் யாருக்கு என்பது தீர்மானமாகும்.

இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்து அரையிறுதியில் பற்றிய சில தகவல்களை அணி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியா இலங்கை போட்டியில் எந்தவித முடிவு கிடைத்தாலும் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தை உறுதி செய்து விடும் ஆகிய இந்திய அணி 2-வது இடத்தை பிடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியுடன் விளையாடும்.

இந்தியா, நியூசிலாந்து  இதில் இந்திய அணி இலங்கையை வெற்றி கொள்ள வேண்டும் தென்னாப்பிரிக்காவிடம்  ஆஸ்திரேலியா தோற்க வேண்டும் இந்த இரு போட்டிகளிலும் ஜூலை 6ஆம் தேதி நடைபெற உள்ளது மேற்கண்ட முடிவுகள் கிடைத்தால் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும் அப்படி பிடிக்கும் பட்சத்தில் இந்திய அணி நியூசிலாந்து இடம் மோதும் 

இந்திய அணி இங்கிலாந்து எதிர் கொள்ளும் பட்சத்தில் அரையிறுதி ஆட்டம் பெர்மிங்காம் மைதானத்தில் நடக்கும் லீக் சுற்றில் இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதின இதில் இந்தியா தோல்வியடைந்தது. லீக் சுற்றில் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது ஆனால் பயிற்சி போட்டியில் இந்தியாவை நியூசிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which team play semi final against in Indian team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->