15 சிக்ஸர்களை பறக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்! கேட்சுகளை கோட்டைவிட்ட இந்தியாவிற்கு இமாலய இலக்கு!  - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. 

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே பவுண்டரி சிக்ஸர் பறக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் லேண்டல் சிம்மன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த பிராண்டன் கிங் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஏவின் லூயிஸுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். ஏவின் லூயிஸு சிக்ஸர் மழையாகப் பொழிய 17 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டாகி வெளியேறினார்.  

அதற்கடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையர் வந்த வேகத்திலேயே சிக்ஸர் மழை பொழிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகமானது மின்னல் வேகத்தில் பறந்தது. இதற்கிடையே சிறப்பாக விளையாடிய பிரண்டன் கிங் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பொல்லார்ட் சிக்சர் மழை பொழிய சிம்ரன் ஹெட்மையர் அரைசதம் அடித்தார். ஹெட்மையர் 41 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 55 ரன்களை எடுத்து சாகல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பொல்லார்டும் 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் வந்த ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 24 ரன்களை குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, சாஹல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு ஏழு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக தீபக் சாஹர்  4 ஓவர்களை வீசி 56 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். 

இந்திய அணி பல கேட்சிகளை தவிர விட்டதுடன், தொடர்ச்சியாக சிக்ஸர்களை வாரி வழங்கி வந்தது. மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாஹலின் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக மூன்று கேட்சிகளை வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரோகித் சர்மா விட்டதுடன், பந்தை சிக்சருக்கும்  அனுப்பிவிட்டனர். அதேபோல ராகுல் கோலியும் கேட்ச் செய்ய முயற்சித்து  பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், கோலி எளிதான பந்துகளை கூட தவறவிட்டு பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக அமைய வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

 

இந்திய அணி இந்த இலக்கை விரட்டி பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா இதுவரை ஒன்பது முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விரட்டி உள்ள நிலையில் 3 முறை மட்டுமே வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. 6 முறை தோல்வியை தழுவியுள்ளது. இன்று என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies set target 208 to india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->