தோனி ஒரு தேச பக்தர்., வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் புகழாரம்!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்திற்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனி  ஓய்வு பெறுவார் என ஊகங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்வதற்கு முன்பே, தோனி துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதனையடுத்து தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. டோனியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தோனிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ‘தோனி களத்தில் நின்றாலே உத்வேகம்தான். அவர் சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டை தாண்டி தாய் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர். கடந்த சில வாரங்களாக வீட்டில் ஓய்வில் இருந்ததால் இதனை எடுத்துக் காட்ட எனக்கு நேரம் கிடைத்தது. நான் இந்த வீடியோவை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பகிர்கிறேன். இந்த வீடியோவை கண்டு என்னை போலவே, நீங்களும் மகிழுங்கள்’ என பதிவிட்ருந்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies player wishes dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->