சந்தர்பால் அபார அரைசதம்! ஜாகீர், முனாப், ஓஜா சிறப்பான ஆட்டம்! கைகொடுப்பாரா சேவாக்!  - Seithipunal
Seithipunal


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மும்பையில் ஐந்து நாடுகள் பங்கேற்கும் முன்னாள் வீரர்களின் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கரும் மேற்கிந்திய தீவுகள் லெஜெண்ட்ஸ் அணியின் கேப்டனாக லாராவும் இருக்கின்றார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக  கங்காவும் சிவ்னரின் சந்தர்பால் களம் கண்டார்கள். இந்திய அணி தரப்பில் ஜாகிர்கான் கோனி, முனாப் படேல், இர்பான் பதான் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன்  இந்திய அணி களமிறங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கங்கா 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அதிகபட்சமாக 41 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார்கள். லாரா 17 ரன்கள் எடுக்க  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ். 

இந்தியாவை பொறுத்தவரை 7 வீரர்கள் பந்துவீசிய நிலையில் ஜாகிர்கான் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் முனாப் படேல் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டும் ஓஜா 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் எடுத்தனர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West indies legends set target 151 to Indian legends


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->