நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்த அசாத்திய கேட்ச்! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வாஷிங்டன் சுந்தர் பௌலிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தி வருகிறார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அதன்படி, 5வது ஓவர் வாஷிங்டன் சுந்தர் முதல் பந்தை சிக்ஸர் கொடுத்த நிலையில், 2வது பந்தில் நியூசிலாந்து அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் விக்கெட் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அதே ஓவரில் கடைசி பந்தில் மார்க் சாப்மனின் சிறந்த கேட்சையும் பிடித்து வெளியேற்றினார். இதுவரை நியூசிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

3 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும், டைவ் அடித்து சிறந்த கேட்சையும் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Washington Sundar stunning catch against newzealand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->