தோனியின் சாதனையை அடிச்சு நொறுக்கி கெத்து காட்டிய கோலி...! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பெருமையை கேப்டன் விராட்கோலி பெற்றுள்ளார். அதோடு தோனியின் சாதனையை அடிச்சு நொறுக்கியுள்ளார். 

அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை தற்போது கேப்டன் கோலி தும்சம் செய்துள்ளார். மேலும் சாதனை நாயகனாக அவரது பாதை தொடர்ந்து கொண்டே இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விராட்கோலியின் தலைமையிலான இந்திய அணி 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கங்குலியின் சாதனையை முறியடித்து தோனியின் சாதனையை சமன் செய்திருந்தார்.

இந்த நிலையில்  நேற்று நடந்த 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

இந்த போட்டியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையையும், சாதனையையும் விராட்கோலி பெற்றுள்ளார். இதனால் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

தோனி கேப்டனாக இந்த பொது 60 டெஸ்ட் மேட்சில் விளையாடி 27 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். விராட்கோலி 48 டெஸ்ட் போட்டிகளிலேயே 28 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். இதனால் வெற்றி பட்டியலில் கங்குலி 3 வது இடத்திலும்,முகமது அசாருதீன் 4 வது இடத்திலும் உள்ளார்.

இதனால் தோனி இல்லாமல் சாதிக்க முடியாது என்ற நிலைமையை மாற்றி, விராட்கோலி சாதனை படைத்துள்ளர். இதனால் இந்திய அணியின் மீதான நம்பிக்கை ரசிகர்களிடம் மேலும் கூடியுள்ளது என்றே கூறலாம்.

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viratkohli break the dhoni record


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->