கேப்டன்ஷிப்பில் தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல ஜாம்பாவன்களின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தன்வசப்படுத்தி இருக்கிறார் மேலும் முறியடிக்க வருகிறார். தற்போது கேப்டன்ஷிப்பில் தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்  டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப்பில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார்.  

தோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 46 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 26 வெற்றி பெற்றுள்ளது.  

இந்திய கேப்டன்களில் சவுரங் கங்குலி தலைமையில் இந்திய அணி 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றி பெற்றுள்ளது. முஹமது அசாரூதின் தலைமையில் 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரிம் ஸ்மித் தலைமையில் 109 போட்டிகளில் 53 வெற்றிகள் பெற்றதே டெஸ்ட் சாதனையாக உள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 48 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். 

இதை தொடர்ந்து வரும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைப்பார் கிங் கோலி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viratkholi will break the dhoni's record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->