அடுத்தடுத்து அதிரடி அரைசதம்! வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறும் இந்தியா! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இன்று மவுன மங்குனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். 

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் 13 ரன்களிலும் முன்ரோ 7 ரன்களிலும் ஆட்டம் இழந்து நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன், 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்

அதன்பின்னர் ரோஸ் டெய்லர் உடன் டாம் லதாம் இணைந்து சிறப்பான பங்களிப்பை அளித்து  நிலையில் சாஹலின் பந்துவீச்சில்  51 ரன்கள் எடுத்த நிலையில் டாம்  லதாம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்கள் . 

அதிகபட்சமாக அந்த அணியில் நிலைத்து நின்று ஆடிய ரோஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 49 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 244 ரன்கள் என்ற இலக்கை நீயிசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, சாகல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள் . கடந்த இரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறினார்.  

இதனை தொடர்ந்து 244 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தவான் அதிரடியாக ஒரு தொடக்கத்தை அளித்தார். மறுமுனையில் மெதுவாக ஆரம்பித்த ரோஹித், தவான் அதிரடியாக ஆட எதிர்பாராதவிதமாக ஒரு பொறுப்பற்ற ஷாட்டினால் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவர்  வெளியேறினார். அதன்பின்பு தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக ரன்கள் சேகரிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அவர்கள் சில சிக்சர்களையும் பறக்க விட்டார்கள். 

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்த நிலையில் பந்தை தவறாக கணித்து ஸ்டம்ப்  செய்யப்பட்டு அவுட்டாகி வெளியேறினார். இந்திய கேப்டன் விராட் கோலி 60 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 32 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்துள்ளது.  அம்பத்தி ராயுடு 13 ரன்களுடனும், தினேஷ் கார்த்தி 0 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள் விராட் கோலி ரோஹித் சர்மா 113 ரன்கள் இணைந்து  அணிக்கு சேர்த்தது மிகப்பெரிய பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat rohit fall after thier fifties


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->