அரைசதம் அடித்த வேகத்தில் விராட் கோலி புதிய உலக சாதனை!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பை போட்டியில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பை விட அதிக பரபரப்பை கொண்டதாக கருதப்படுவது இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியாகும்.  

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் முகமது ஆமிரின் பந்தை நேர்த்தியாக தடுத்து ஆடினார். மறுமுனையில் ஆரம்பம் முதலே ரோகித் சர்மா அடித்து ஆட தொடங்கினார். 

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா 34 பந்துகளிலும், நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 69 பந்துகளில் அரை சதமடித்தார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100  ரன்களை கடந்த நிலையில், 136  ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

85 பந்துகளில் சதமடித்த ரோஹித் ஷர்மா, தேவையற்ற ஷாட்டினால் 140 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் விராட் கோலி நிதானமாக விளையாடிய ஆட்டத்தினை அதிரடிக்கு மாற்றினார்.

51 பந்துகளில் அரை சதமடித்த அவர் 57 ரன்களை கடந்த போது ஒருநாள் அரங்கில் 11000 ரன்களை வேகமாக கடந்தவர் என்ற சாதனையை சச்சினிடமிருந்து தட்டி பறித்துள்ளார்.

குறைந்த ஆட்டத்தில் 11000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 222 ஆட்டங்களில் இந்த சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 276 ஆட்டங்களில் எடுத்திருந்தார். 

ஒவ்வொரு 1000 ரன்களை கடக்கும் போதும் வேகமாக எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த விராட் கோலியின் சாதனைகளை தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா முறியடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கோலி மிக வேகமாக முன்னேற ஆம்லா பின்தங்கிவிட்டார். 

தற்போது சாதனைகளாக 8,000 ரன்களை (175) ஆட்டங்களிலும், 9,000 ரன்களை (194) ஆட்டங்களிலும், 10,000 ரன்களை (205) ஆட்டங்களிலும், 11,000  ரன்களை 222 ஆட்டங்களிலும் எடுத்துள்ளார். 

1000 ரன்களை 24 ஆட்டங்களிலும். 2000 ரன்களை 53 ஆட்டங்களிலும், 3000 ரன்களை (75) ஆட்டங்களிலும், 4000 ரன்களை (93) ஆட்டங்களிலும், 5000 ரன்களை (114) ஆட்டங்களிலும், 6000 ரன்களை (136) ஆட்டங்களிலும், 7000 ரன்களை (161) ஆட்டங்களிலும் எடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli world record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->