உலகக்கோப்பையில் முதலில் 500 ரன்கள் அடிக்கப்போவது இவர்கள் தான்.! இந்திய அணி இல்லை.!! - Seithipunal
Seithipunal


12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. 

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3வது உலகக் கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இந்த உலகக் கோப்பையில் முதல் முதலாக 500 ரன்கள் அடிக்க கூடிய அணி எதுவாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த விராட் கோலி, என்னை பொறுத்த வரை இந்த உலக கோப்பையில் முதல் முதலாக 500 ரன்கள் அடிக்க கூறிய திறமை இங்கிலாந்து அணி இடம் தான் உள்ளது. இது அவர்களது சொந்த மண் என்பதால் மற்றவர்களைவிட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் என்றார்.  

இந்த தொடர் அதிக ரன்கள் குவிக்கும் தொடராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடரின் ஆரம்பத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli says first team 500 runs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->