3-வது டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் மாற்றம்.? விராட் கோலி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, டிராவில் முடிவடைந்தது. 

இதைத்தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா.? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டுவர எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த போட்டியில் சூப்பராக கம் பேக் கொடுத்து அசத்தினோம். எனவே வெற்றி கூட்டணியை கலைக்க யாராவது விரும்புவார்களா என தெரிவித்துள்ளார். கோலியின் இந்த பதிலால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli says about playing xi for 3rd test match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->