ரோகித் சர்மாவை இந்த பதவியில் இருந்து தூக்க வேண்டும்.. பிடிவாதம் பிடிக்கும் கோலி.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக உள்ளார். கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறையாகவே உள்ளது. இதனிடையே, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.

இதனிடையே நேற்று முன் தினம் துபாயில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து, டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முன்னாள் வீரர்களும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும், ரோஹித் சர்மாவை கேப்டனாக வேண்டும் என பிசிசிஐ, நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், ரோகித் சர்மா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பிசிசிஐ  தேர்வாளர்கள் குழுவிடம் பேசிய விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு 34 வயதாவதால், அவரை ஒரு நாள் போட்டியில் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக கே எல் ராகுலை நியமிக்க வேண்டும். மேலும், டி20 போட்டிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்ட்டை துணை கேப்டனாக வேண்டும். இந்த முடிவு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli says about oneday vice captain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->