சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டி நடைபெற்று முடிந்தது. அதில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ஓவன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 11 ரன்களிலும், கேஎல் ராகுல் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். புஜாரா 4 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 10 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கோலி, 96 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரகானே 14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் 9 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த இன்னிங்சில் விளையாடிய போது சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த இன்னிங்சில் 23 ஆயிரம் ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்சில் 23 ஆயிரம் ரன்களை எடுத்திருந்தார். ரிக்கி பாண்டிங் 544 இன்னிங்சில் 23 ஆயிரம் ரன்களை எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 490 இன்னிங்சில் 23 ஆயிரம் கடந்து சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli new record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->