இங்கிலாந்து மண்ணில் பல சாதனைகளை படைக்க உள்ள கேப்டன் விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த தொடரில் பல சாதனைகளைப் படைக்க இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் டெஸ்ட் தொடரில் 7 ஆயிரத்து 547 அடித்துள்ளார். இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். 

விராட் கோலி தற்போது வரை 92 போட்டிகளில் 27 சதம், 25 அரைசதம் அடித்துள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 211 ரன்கள் அடித்தால், அந்த அணிக்கு எதிராக 2000 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். டிராவிட் 1950 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை விராட் கோலி 27 சதம் அடித்துள்ளார். மேலும், ஒரு சதம் அடித்தல் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளுவார். இரண்டு சதம் அடித்தால் ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க் சாதனைகளை முறியடிப்பார். விராட் கோலியும், கிளைவ் லாய்டு தலா  36 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு போட்டியில் விராட் கோலி வெற்றி பெற்றால், கிளைவ் லாய்டு  சாதனையை முறியடிப்பார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli new for test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->