உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்.... பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்...யார் இவர்.?! - Seithipunal
Seithipunal


அதிக சதங்கள், அதிக ரன்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.... இந்திய அணிக்காக மிகப்பெரியதாக பங்காற்றியவர்.!

வலது கை மட்டை பந்தாளர்... வலது கை, மிதவேக பந்து வீச்சாளர்... 'கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர்...

துவக்க மட்டையாளராக களமிறங்குபவர்.. உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்....யார் இவர்.?!

விராட் கோலி:

பிறப்பு : 

இந்திய அணியை வழிநடத்தும் சிறந்த இளம் வீரர் விராட் கோலி டெல்லியில் 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிறந்தார். 15 வயதிற்கு உட்பட்டோருக்கான முதல் தர போட்டியில் டெல்லி அணி சார்பாக களம் கண்டார் கோலி. விராட் கோலியை பெரும்பாலும் 'சிக்கு" என்றே அழைக்கப்படுகிறார்.

குடும்பம் : 

இவரின் தந்தை பிரேம் கோலி குற்றவியல் வழக்கறிஞர், தாய் சரோஜ் கோலி குடும்பத் தலைவி ஆவார். இவருக்கு விகாஸ் என்ற சகோதரரும், பாவானா என்ற சகோதரியும் உள்ளனர்.

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் 11ஆம் தேதி 2017ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள புளோரன்சில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜனவரி 11ஆம் தேதி 2021ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

சாதனைகள் : 

அதிரடி, ஆக்ரோஷம், நேர்த்தி என தனது பேட்டிங் திறமையை நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டார் விராட். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 2008ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமையேற்று, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 38 சதங்களை விளாசியவர், சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 18 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைகளை வசப்படுத்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில், 6 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்ஆர் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சராசரியாக 49 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி.

ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விருது : 

விராட் கோலிக்கு 2017ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது, 2013ஆம் ஆண்டு இந்திய அரசின் மிகப்பெரிய கௌரவமான பத்மஸ்ரீ விருதையும், 2013ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2018ஆம் ஆண்டின் விளையாட்டுகான மிகப்பெரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டார்.

விராட் இளைய ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை 2012ஆம் ஆண்டில் பெற்றார். அப்போது அவருக்கு வயது 22 ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli History 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->