#வீடியோ : பழிக்கு பழி அவ்வளவு தான்! வெறித்தனமான ஆட்டத்திற்கு காரணமான அந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில், அதிரடியாக ஆக்ரோஷமாக விளையாடிய, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வித்தியாசமான நோட் புக் கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ஏன் அவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன் என கோலியே விளக்கமளித்துள்ளார். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. சவாலான 208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 

இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுபெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 6 பவுண்டரி 6 சிக்சருடன் 94 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் வில்லியம்ஸ் பந்துகளை சிக்ஸர் பவுண்டரியாக பறக்கவிட்டார். வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்து பவுண்டரிக்கு பறந்த நிலையில், கோலி வித்தியாசமாக ‘நோட் புக்’ ஸ்டைலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த நோட்புக் ஸ்டைல் கொண்டாட்டம் என்பது பவுலர் வில்லியம்ஸின் கொண்டாட்ட ஸ்டைல் ஆகும். 

இந்த கொணடாட்டம் ஏன் என்பதற்கு விளக்கமளித்த கோலி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜமைக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டியின் போது நான் அவுட் ஆன போது, நோட் புக் கொண்டாட்டத்துடன் வில்லியம்ஸ் என்னை வழி அனுப்பி வைத்தார். அதனால் அந்த கொண்டாட்டத்தினை இன்று நான் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனவே தான் கொண்டாடும் வகையில் நோட்புக்கில் சில டிக்குகளை செய்தேன். இருப்பினும் ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கைக்குலுக்கி மகிழ்ந்தோம். களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போதும் மதிப்பு அளிக்கவேண்டும் என கோலி தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli give explanation for his celebration


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->