கேப்டனாக புதிய தடத்தை பதித்த கோலி.! தாதாவை பின்தள்ளி தோனியை நெருங்கும் கோலி.!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட்கோலி. இவரது கேப்டன்சி குறித்து பல விமர்சங்கள் இருந்தாலும், அத்தனை விமர்சனங்களையும் கடந்து கேப்டனாக பல சாதனைகளை செய்து தான் வருகிறார். மேலும், இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தனது தடத்தை பதித்திருக்கிறார். 

2014ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி டெஸ்ட் மேட்சில் இருந்து ஓய்வு பெற்றபின், டெஸ்ட் அணியின் கேப்டனாக பெறுப்பேற்றவர் கோலி. அன்றிலிருந்து இன்றுவரை இவரது கேப்டன்சியை விமரிசனம் செய்து வந்தார்கள், அனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காத கோலி தொடர்ந்து தனது அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

அந்த வகையில், கோலி கேப்டன்சியில் இந்த 5 ஆண்டுகளில் இதுவரை இந்திய அணி, 49 போட்டிகளில் ஆடி 29 வெற்றிகளை குவித்துள்ளது. கங்குலி, தோனியை விட அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக திகழும் கோலி, 50வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி  வருகிறார்.

இதை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கி நடந்துவரும் டெஸ்ட் போட்டி, விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் 50வது டெஸ்ட் போட்டி. இதன்மூலம் தோனிக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அரைசதம் அடித்துள்ள கேப்டன் என்ற சிறப்பை பெற்றுள்ளார் கோலி. 

இதனால், தோனிக்கு அடுத்தபடியாக அதிகமான டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். தோனி மொத்தமாக 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிருக்கிறார். விராட் கோலி, தோனியின் இந்த சாதனையை விரைவில் முறியடிக்கவுள்ளார். இன்னும் 11 போட்டிகளில் கோலி கேப்டன்சி செய்தால் தோனியின் சாதனை முறியடிக்கப்படும். 

கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 50வது டெஸ்ட் போட்டியை வழிநடத்தும் கோலி, கங்குலியை பின்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli achieve as a captain of team india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->