ரசிகர் கேட்ட கேள்விக்கு பளீரென பதில் கூறிய விராட்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரராக இருக்கும் விராட் கோலி கடந்த 2015ல் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். 

சமீபத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சமூக வலைதளங்களில் பிசியாக எப்போதும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். 

அந்த வகையில், கிரிக்கெட் வீரர் கோலி உடற்பயிற்சி செய்கின்ற காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோவை கண்ட ஒரு ரசிகர், "நீங்கள் அசைவம் சாப்பிடாவிட்டாலும் கூட மிகவும் உடல் வலிமையுடன் இருக்கிறீர்கள்.?" என்று கமெண்ட் செய்துள்ளார். 

இதை பார்த்த கோலி உடனே, "அசைவம் சாப்பிட்டால் மட்டும்தான் உடல் வலிமையாக இருக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. சைவம் சாப்பிட்டாலும் உடல் வலிமையுடன் இருக்க முடியும். நானே சாட்சி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli about his health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->