டி20 தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் சீசனின் 35வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதியது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி சென்ற ஆட்டம் போலவே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. இதையடுத்து. களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. 

மும்பை அணிக்கு எதிராக அற்புதமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 51 ரன்களை விளாசினார். விராட் கோலி தனது 13ஆவது ரன்னை கடந்தபோது டி20 தொடரில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது சர்வதேச வீரராவார். 

இதுவரை 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்ளிட்டவை அடித்து 1038 ரன்களை எடுத்துள்ளார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் 14,275 ரன்கள், பொல்லார்டு 11195 ரன்கள், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்  10808 ரன்கள், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 10,019 ரன்களை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohi 10000 runs in t20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->