அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-வங்கதேசத்துக்கு இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 136 ரன்களை குவித்தார். இதன்மூலமாக அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் 928 புள்ளிகளைப் பெற்றார். 

இதற்கிடையே, ஆஸ்திரேலியா-பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மித், 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் 931 புள்ளிகளில் இருந்து 923 புள்ளிகளுக்கு இறங்கினார். 

இதற்கிடையே, ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரஹானா, தரவரிசைப் பட்டியலில் 6 ஆம் இடத்தில் உள்ளார். 

அடிலெய்ட் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் 335 ரன்கள் எடுத்த வார்னர், 12 இடங்கள் முன்னேறி 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kholi first place in test bastsman chart list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->