இந்தியாவிற்கு பின்னடைவு! முதல் பந்திலேயே வியப்பில் ஆழ்த்திய தமிழகத்தின் விஜய் ஷங்கர்!    - Seithipunal
Seithipunal


இன்றைய உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. லோகேஷ் ராகுல் 57, ரோஹித் சர்மா 140, கோலி 77 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இந்தியா அணி 336 ரன்களை அடித்துள்ளது. 

337 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலர்களான புவனேஷ்வர், பும்ரா நேர்த்தியாக பந்துவீசினார்கள். 

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பாக்கர் ஜமான் நிதானமாக விளையாடினார்கள். ரன்ரேட் பெரிதாக செல்லவில்லை என்றாலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 7 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசிக்கொண்டிருக்கும் போதே, ஆடுகளம் வழுக்கியதால் காயமடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

அவர் காயம் பெரியதாக இருப்பின் இந்திய அணிக்கு நிச்சயமாக பின்னடைவாகவே இருக்கும். புவனேஷ்வர் வெளியேறியதால் அந்த ஓவரை நிறைவு செய்ய உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக களமிறங்கியுள்ள தமிழகத்தின் விஜய் ஷங்கர் அழைக்கப்பட்டார். 

அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி இந்திய அணியினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார். விக்கெட் விழுந்ததை பார்த்து இந்திய வீரர்கள் அனைவரும் நம்பமுடியாத குதூகலத்தில் மிதந்தார்கள்.

பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay shankar took wicket in his first ball of CWC19


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal