முன்னாள் இந்திய வீரர்கள் 2  பேருக்கு கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிக்க தடை.! பிசிசிஐ தடாலடி.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் தற்போது பயிற்சியாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி பதவி வகிக்கிறார், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராக லட்சுமண் பதவியில் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் ஆதாயம் பெறும் வகையில் பொறுப்பு உள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இது இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விசாரணை நடத்தினார். 

Image result for ganguly lakshman

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி இரண்டு பதவிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் வகிக்க முடியும் என்பதை டி.கே.ஜெயின் தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கு இரண்டு வாரத்திற்குள் ஒரு பொறுப்பில் இருந்து விலகும்படி அறிவுறுத்தியுள்ளார். விதிமுறை என்ன? என்பது இருவருக்கும் தெரியும் என்பதால் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two former Indian players banned from the cricket board BCCI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->