டாப் கியரில் தொடங்கி டர்ர்ர்ர்.. ஆன ட்ரையல்பிளாஸர்ஸ்! மந்தனா அபார பேட்டிங், ராதா யாதவ் 5 விக்கெட்!  - Seithipunal
Seithipunal


பெண்களுக்கான 20 ஓவர் போட்டிகள் ஆனது, தற்போது சார்ஜாவில் நடைபெற்று வருகிறது மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடரின் இறுதிப் போட்டியானது இன்று சார்ஜாவில் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் பிரியா புனியா நீக்கப்பட்டு பூஜா வஸ்ட்ராக்கர் அணியில் இணைக்கப்பட்டார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனாவும், டாட்டினும் களம் இறங்கினார்கள். கடந்த இரண்டு போட்டிகளில் மந்தனா அடக்கி வாசிக்க டாட்டின் அதிரடியாக விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் தலைகீழாக மந்தனா அதிரடியாக விளையாட டாட்டின் அடக்கி வாசித்தார்.

மந்தனாஅதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் மந்தமாக ஆடிய டாட்டின் இரண்டாவது 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மந்தனா 49 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 68 ரன்களை குவித்து ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு வந்த வீராங்கனைகள் வரிசையாக வெளியேற, சிறப்பாக தொடங்கிய ட்ரையல்பிளாஸர்ஸ் அணி கடைசியாக 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. 15-வது ஓவரில் மந்தனா ஆட்டம் இழக்கும் போது 101 ரன்களை எடுத்திருந்த அந்த அணி 20 ஓவர் முடிவில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 

சூப்பர் நோவாஸ் அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ராதா யாதவ் 4 ஓவர்களில் 16 இரண்டு மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் இறுதி ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trailblazers scored 118 after getting good start


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->