உலகக்கோப்பை லீக் தொடரின் முடிவில் அதிக ரன்கள், விக்கெட்களை எடுத்த வீரர்களின் பட்டியல்!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்:- 

இந்தியாவின் ரோஹித் சர்மா 647 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் 638 ரன்களுடன் இரண்டாவது  இடத்தில் உள்ளார்.

வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் 606 ரன்கள் எடுத்து மூன்றாவது  இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ஞ் 507 ரன்களுடன் நான்காவது  இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 500 ரன்கள் குவித்து ஐந்தவது இடத்தில் உள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் பட்டியல்:- 

26 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். 

20 விக்கெட்களை வீழ்த்தி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான்  இரண்டாவது  இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 17 வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன், இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஆர்சர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீர்  உள்ளிட்ட வீரர்கள் 17 விக்கெட்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியல்:-

டேவிட் வார்னர் 166 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்  153 ரன்களுடன் இரண்டாவது  இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜாசன் ராய் 153 ரன்களுடன் மூன்றாவது  இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் 148 ரன்களுடன் நான்காவது  இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் 148 ரன்களுடன் ஐந்தவது இடத்தில் உள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் தொடரில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களில் பட்டியல்:-

பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி 35 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 26 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.  

வங்கதேச அணியின் ஷகிப்-அல்-ஹசன் 29 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top 5 runs and wicket list world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->