என்னை பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா தோனி? கோரிக்கை வைத்த இளம் பெண்.! நேற்றை ஆட்டத்தில் நடந்த நிகழ்வு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 29 ஆவது போட்டி நேற்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதிது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் விளையாடாத கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் சுனில் நரைன் கிறிஸ் லின் இந்த போட்டியில் களமிறங்கினார்கள். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நிதிஷ் ராணாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் லின்.  நிதிஷ் ராணாவை  21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதே ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ராபின் உத்தப்பா கோல்டன் டக்  ஆகி வெளியேறினார். அதன்பிறகு கார்த்திக் நிதானமாக நிற்க மறுபுறம் கிறிஸ் லின்  பவுண்டரிகளை விளாசினார். அவர் அரை சதம் அடித்த நிலையில் 51 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் 82 ரன்கள் எடுத்திருந்த போது தாஹீர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆண்ட்ரே ரசெல்  10 ரன்களை எடுத்து அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் இறுதி ஓவர்களில் ரன்களை அதிகரிக்க அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியால் கார்த்திக் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 ஓவர் முடிந்த  நிலையில் கொல்கத்தா அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சென்னை அணியின் தரப்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும் , தாக்குர் 2 விக்கெட்டுகளையம் எடுத்தனர். 

162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. வாட்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ரெய்னா   5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு வந்து 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜாதவ் (20), தோனி (16) சிறிது நேரம் விளையாட சென்னை அணி வெற்றியை நெருங்கியது.  ஜடேஜா  17 பந்துகளில் 31 ரன்களை அடித்து சென்னை அணியை வெற்றிபெற வைத்தார். 

இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் தோனியின் பெண் ரசிகை ஒருவரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அந்த ரசிகை என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா தோனி? நான் ஜிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பேனரில் எழுதி போட்டியை காண மைதானத்தில் வந்திருந்தார்.  இவரது இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

English Summary

tomorrow ipl match in women fan request dhoni


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal