#ஒலிம்பிக்: முதல் தங்கத்தை தட்டி தூக்கிய யாங் கிங்.! அதிர்ச்சி அளித்த இளவேனில் வாலறிவன்.! - Seithipunal
Seithipunal


டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வாலறிவன் 16-ம் இடத்தையே பிடித்தார். 

மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா 36-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் முதலிடம் பிடித்தார். 

இறுதி போட்டிக்கு 2 தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நார்வே, சீனா, அமெரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் உள்பட 8 பேர் தகுதி பெற்றனர். 

இந்நிலையில், இறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீன நாடு முதல் தங்கத்தை வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் ரஷ்யாவை சேர்ந்த கைலாஷினா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்றாவதாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tokyo olymic ten meter air rifle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->