இன்று முக்கிய உலக சாதனை படைப்பாரா? கோலி.! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளது. இந்த போட்டியில் கோலி  ஒரு முக்கியமான உலக சாதனை படைப்பாரா என்று ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் மற்றும் டி20 டெஸ்ட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர் இருவரும் சரியாக 453 சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Image result for sachi lara

இதற்கு அடுத்து விராட் கோலி தற்போது 415 போட்டிகளில் 131 டெஸ்ட், 222 ஒருநாள் 62 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தமாக 19 ஆயிரத்து 896 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6613 ரங்களும், ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 20 ரன்களும், டி20 போட்டியில் 2263 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி 20 ஆயிரம் வீரர்களை அதிவிரைவாக கடப்பார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 104 ரன்கள் தேவைப்படுகிறது.

Related image

இதற்கு அடுத்தபடியாக சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது  ராகுல் ட்ராவிட் உள்ளார் இவர் 24 ஆயிரத்து 208 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினை  தகர்த்து இன்று சாதனை படைப்பார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today important record can? beat kohli.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->