சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம்.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் அணியும் மோத உள்ளது. இரு அணிகளும் இதுவரை 24 முறைநேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறை வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியை 9 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்நிலையில், சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளதால், சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தோனி முயற்சி செய்கிறார். ரெய்னாவுக்கு பதில் ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பளித்தார். இன்றைய போட்டியில் பிராவோவுக்குப் பதில் நியூசிலாந்து இடதுகை வீரர் மிட்செல் சாண்ட்னர் களமிறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச பட்டியல் : ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ் மெயின் அலி, அம்பதி ராயுடு,  ராபின் உத்தப்பா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்) ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today csk vs pbks match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->