இது LockDown நேரம்... வீட்டில் தனிமையை எப்படி போக்கலாம்? திருடன்-போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


சற்றும் எதிர்பாராத விதமாக பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது நாம் வீடுகளில் முடங்கி இருப்பது. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் வீட்டில் இருந்தப்படியே நம் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை கற்று கொடுங்கள். பாரம்பரிய விளையாட்டுகளில் மிக முக்கிய இடம் பிடிக்கும் திருடன்-போலீஸ் விளையாட்டை பற்றி இன்று காண்போம்.

விளையாடும் முறை :

கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன்-போலீஸ். ஐந்து குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு.

காகிதத்தை எடுத்து ஒரேமாதிரி சதுரமாக வெட்டி அதில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என எழுதி மடித்து தரையில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுப்பர்.

பின்பு போலீஸ் யார் என்பர்? அந்த சீட்டு உள்ளவர் நான் தான் போலீஸ் என்றவுடன் மற்ற நால்வரும் அமைதியாக இருப்பார்கள்.

போலீஸ் சீட்டு வைத்து உள்ளவர் திருடன் சீட்டு வைத்திருப்பவரை கண்டுபிடிக்க வேண்டும். திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீஸிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். அதை கூர்ந்து நோக்கி நால்வரில் திருடனை கண்டறிய வேண்டும்.

போலீஸாக உள்ளவர் திருடனை தவறாக கண்டறிந்தால் போலீஸ்-க்கு புள்ளி பூஜ்ஜியம் ஆகிவிடும். திருடனுக்கு போலீஸின் வெற்றி புள்ளி வழங்கப்படும். இவ்வாறு தொடர்ச்சியாக இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.

பயன்கள் :

ஒருவரின் முகத்தை பார்த்து அவரின் மனநிலையை கணிக்கின்ற சவாலான உளவியல் பயிற்சியை கொண்டது இந்த திருடன்-போலீஸ் விளையாட்டு.

இவ்விளையாட்டின் மூலம் இன்ப துன்பங்கள், கள்ளங்கபடம் எனப் பல்வேறு மனநிலைகளையும் இளம் பருவத்திலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirudan police game


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->